மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்

மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்

4S8A7253

 “மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்”
 
இயக்குனர் சரண் எப்போதுமே ‘சிறந்த பொழுதுபோக்கு’ படங்களுக்காக பாராட்டப்படுகிறார். அவரது திரைப்படங்கள் காதல், ஆக்‌ஷன், நகைச்சுவை, இளைஞர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்களின் ரசனைகளை பூர்த்தி செய்யும் எல்லாவற்றையும் தாராளமாக கொண்டிருக்கின்றன. சமீபத்தில் வெளியான அவரது “மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்” படத்தின் டீசர் மூலம் இந்த படம் அனைவருக்கும் 100% பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் அளிக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது. சரண் அவர்களின் திறமையானது சிறந்த பொழுதுபோக்கு படங்களை வழங்குவதில் மட்டும் இல்லை, அதையும் தாண்டி ஒவ்வொரு கதாபாத்திரத்தை வடிவமைப்பதிலும், சரியான கலைஞர்களை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து, அதிர்ச்சியூட்டும் தாக்கத்தை ஏற்படுத்துவதிலும் அவரது புத்திசாலித்தனம் அதிக அலங்காரங்களை படத்துக்கு சேர்க்கிறது.

C09A6612
ஆரவ்வின் கவர்ச்சிகரமான ஆளுமை, அவருக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு. இப்போது அவரது கம்பீரமான குரலை கேட்பது மேலும் ஈர்ப்பை சேர்க்கிறது. ராதிகா சரத்குமார் ஒரு தாதாவாக தோன்றுவது மற்றொரு சிறப்பம்சமாகும். மேலும் நாசர், காவ்யா தாப்பர், ஆதித்யா, சாம்ஸ், நிகிஷா படேல் மற்றும் பலர் உட்பட அனைவருக்கும் முக்கியத்துவம் இருக்கும் என்பது உறுதி. டீசர் படம் குறித்து நல்ல எதிர்பார்ப்புகளை அளித்துள்ள நிலையில், ரோகேஷ் எழுதிய வரிகளுக்கு, சைமன் கே கிங் ஒரு புதிய பரிமாண இசை வகையில் இசையமைத்துள்ள முதல் சிங்கிள் பாடலான ‘தா தா’ பாடல் ஒரே இரவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

சுரபி ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கான எஸ்.மோகன் “மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்” படத்தை தயாரிக்கிறார். சைமன் கே கிங் இசையமைக்கும் இந்த படத்தில், தனது மூத்த சகோதரர் சரண் உடன் முதன் முறையாக இணைந்துள்ளார் ஒளிப்பதிவாளர் கே.வி. குகன். கோபி கிருஷ்ணா (படத்தொகுப்பு), ஏ.ஆர்.மோகன் (கலை), ஹரி தினேஷ், விக்கி மற்றும் பிரதீப் தினேஷ் (சண்டைப்பயிற்சி), கல்யாண் & தினேஷ் (நடனம்) ஆகியோர் தொழில்நுட்பக் கலைஞர்களாக பணிபுரிந்துள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *