மேற்கத்திய இசையில் தடம் பதிக்கும் மூன்று தமிழர்கள்

மேற்கத்திய இசையில் தடம் பதிக்கும் மூன்று தமிழர்கள்.

THIRUVIZHA TRACK LIST

தமிழ் இசை உலகில் திரைப்படப்பாடல்களுக்கும்,பக்தி பாடல்களுக்கும் இருக்கும் 

அதே வரவேற்பு தற்போதுதிறமையான இசை கலைஞர்கள் உருவாக்கும் 

ஆல்பங்களுக்கும் இருக்கிறது. ‘இசைக்கு மொழியில்லை,

WhatsApp Image 2020-02-10 at 17.21.07

கலைக்கு எல்லையில்லைஎன்பார்கள்.அதைப்போல் இன்றைய இளைய 

தலைமுறையினர் உலகளாவிய இசையை தமிழில் கேட்பதை விரும்புகிறார்கள்

அதிலும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் 

மேற்கத்திய இசையை கேட்பதில் மட்டுமல்லஅத்தகைய இசையிலும் 

தங்களது முத்திரையையும் பதித்து கவனத்தை ஈர்த்து வருகிறார்கள்.

அந்த வரிசையில் தற்போது இணையத்தில் லட்சக்கணக்கான லைக்குகளை 

பெற்று ‘திருவிழா’ என்ற ஆல்பம் வைரலாகி வருகிறது.

WhatsApp Image 2020-02-10 at 17.21.08

          இதுகுறித்து அந்த ஆல்பத்தின் இசை அமைப்பாளர்பாடலாசிரியர்தயாரிப்பாளர்

நடிகர் என பன்முகத்திறமையுடன் வலம் வரும் வினுஷன் விஷ்ணுகுமார்

(Vinushan Vishnukumar- FSPROD Vinu) பேசுகையில்,“

FSPROD 2

FSPROD என்ற இசைக்குழுவின் சார்பில் நானும்,என்னுடைய நண்பர்களான 

மிதுலன் வாசன் (Mithulan Vasan-FSPROD Mithu) மற்றும் விதுர்ஷன் கணேசராஜா 

(Vithurshaan Kanesarajah-FSPROD

Vithi)ஆகிய மூவரும் இணைந்து இந்த ஆல்பத்தை உருவாக்கினோம்.

WhatsApp Image 2020-02-10 at 17.21.10

        எங்களுடைய பெற்றோர்கள் இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்திற்கு புலம் 

பெயர்ந்தார்கள்நாங்கள் மூவரும் சுவிட்சர்லாந்தில் தான் பிறந்தோம்

பதிமூன்று வயதிலிருந்து எங்கள் மூவருக்கும் இசை மீதிருந்த தீரா காதலால்

 ஒன்றிணைந்தோம்பெரும் முயற்சிக்கு பிறகு 2010 ஆம் ஆண்டில் நாங்கள் 

மூவரும் இணைந்து ‘FSPROD’என்ற இசைக் குழு ஒன்றினை தொடங்கினோம்

முதலில் சுவிஸ் மற்றும் ஜெர்மன் மொழியில் பாடல்கள் எழுதி இசையமைத்தோம்

அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததுஅதன் பிறகு தமிழில் ஆல்பம் 

செய்யவேண்டுமென்று விரும்பினோம்.

FSPROD 3

வித்தியாசமானதாகவும்தரமாகவும் இருக்கவேண்டும் என்பதற்காக எங்களின்

 தேடல் தொடங்கியதுகடந்த ஆண்டில் 12 பாடல்கள் அடங்கிய ‘சட்டப்படி’ 

என்ற ஆல்பத்தையும்அதே ஆண்டில் 15 பாடல்கள் அடங்கிய ‘திருவிழா’ 

என்ற ஆல்பத்தையும் வெளியிட்டோம்இதற்கு நாங்கள் எதிர்பார்க்காத 

அளவிற்கு பெரும் ஆதரவும்பாராட்டும் கிடைத்ததுஇந்த பாடல்களை 

வீடியோவாகவும் தயாரித்துஇணையத்தில் வெளியிட்டோம்அதற்கும் 

லட்சக்கணக்கான பார்வைகள் பெற்று எங்களை உற்சாகப்படுத்தியது.

WhatsApp Image 2020-02-10 at 17.21.10 (4)

           ஒரே ஆண்டில் இரண்டு பெரிய ஆல்பங்களை எங்களுடைய இசைக்குழு 

மட்டும்தான் வெளியிட்டிருக்கிறதுஅத்துடன் ஐரோப்பிய நாடுகளில் 

இசை நிகழ்ச்சி நடத்த ஏராளமான வாய்ப்புகளும் கிடைத்ததுஅழைப்பினை 

ஏற்று இதுவரை ஜெர்மனிடென்மார்க்கனடாபிரான்ஸ்சிங்கப்பூர்மலேசியா,

 லண்டன்அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு வெற்றிகரமாக இசை பயணம் 

மேற்கொண்டோம்.

FSPROD Vithi (Vithurshaan Kanesarajah)1

      எங்களது தயாரிப்பில் வெளியான ‘திருவிழா ’என்ற ஆல்பம்,  கடந்த 2019 ஆம் 

ஆண்டில் ஸ்விட்சர்லாந்தில் அதிகமானவர்கள் பார்வையிட்ட ஆல்பம் என்ற 

பெருமையும்அதிகளவில் பிரபலமான பாடல் என்ற பாராட்டும்சிறந்த ஆல்பம் 

என்ற விருதும் எங்களுக்கு கிடைத்திருக்கிறதுஅந்நியத் தேசத்து மண்ணில்

 பிறந்து வளர்ந்தாலும்இங்குள்ள கலாச்சாரத்தையும்எங்களது ஆதி 

கலாச்சாரத்தையும் சமமாகவே பாவித்து வருகிறோம்தொடர்ந்து 

இசைப்பயணம் மேற்கொண்டுஇசையால் இந்த உலகை ஒன்றிணைக்க 

திட்டமிட்டிருக்கிறோம்.”என்றார்

FSPROD Vinu 5

         இதனிடையே ‘FSPROD’ என்ற இவர்களது இசைக்குழுவின் சார்பில் இவர்கள் 

ஆல்பங்கள் தயாரித்து வெளியிட்டாலும்இசைத் தொடர்பான அனைத்து 

பணிகளையும் இந்நிறுவனம் சார்பில் மேற்கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Mithulan Vasan (FSPROD Mithu) 3

              இவர்கள் இயற்றிய பாடல்கள் எல்லாமே பிரபல்யம் தான் .அதில் ஹபீபி (Habibi)

மற்றும் வத்திக்குச்சி (Vathikuchi) ஆகிய இரண்டும் பிரபல்யமான பாடல்கள் ஆகும் .

இரண்டுமே youtubeil சரித்திர சாதனைகள் படைத்தது .இதில் ஹபீப் 10 மில்லியன் 

பார்வையாளர்களை கொண்டது .ஸ்விட்சர்லாந்தில் மக்களை அலற விட்ட 

பாடல்கள் என கூறலாம்





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *