2 வது சென்னை போட்டோ பியனாலே 2019!

வது சென்னை போட்டோ பியனாலே 2019!

இந்தியாவின் பிரமாண்டமான போட்டோகிராபி கண்காட்சி

2019 பிப்ரவரி 22 முதல் மார்ச் 24 வரை!

பிப்ரவரி, 2019: சென்னை போட்டோ பியனாலேவின் 2வது புகைப்படக் கண்காட்சி சென்னையில், பிப்ரவரி 22-ம் தேதி தொடங்க உள்ளது. 13 நாடுகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட புகைப்படக்காரர்களின் படைப்புகள் இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி, சர்வதேச கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள், திரைப்பட காட்சிகள், உரையாடல்கள் ஆகிய நிகழ்ச்சிகளும் இதில் இடம் பெற்றுள்ளன.

சி.பி.பி பவுண்டேஷன், கோதே இன்ஸ்ட்யூட் சென்னை/ மேக்ஸ் முல்லர் பவன் இணைந்து வழங்கும் தி பியனாலேவில், புகழ்பெற்ற சிற்ப கலைஞர் புஷ்பமாலா ஆர்டிஸ்டிக் இயக்குநர் பங்கேற்க உள்ளார். “ஃபானா ஆஃப் மிரர்ஸ்” என்ற கருத்தின் அடிப்படையில் இந்த ஆண்டின் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இவ்வுலகின் இன்னொரு பக்கத்தை காட்சிப்படுத்தவும், வேறு உலகத்தை காண்பிக்க முயல்வதே இதன் அர்த்தமாகும். நாகரிக வாழ்க்கையின் பிரதிபலிப்பாக இருப்பவையை காட்சிப்படுத்தி வருகிறார் புஷ்பமாலா.

“போட்டோகிராபியை பேசுக்கருவியாக பயன்படுத்தும் கலைஞர்களுக்கான தளமாய் உள்ளது, போட்டோ பியனாலே. சென்னையின் முக்கிய பகுதிகள் தளமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள் கொண்டாடும் படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளோம்” என்றார் 2019 சென்னை போட்டோ பியனாலேவின் ஆர்டிஸ்டிக் இயக்குநர் புஷ்பமாலா.

பியனாலேவின் முக்கிய அம்சம், மார்ச் 16, 17-ம் தேதிகளில் நடைபெறும் சர்வதேச போட்டோகிராபி கருத்தரங்கம். (எழும்பூர் கண்காட்சி மையம் தியேட்டரில் நடைபெறும்) ‘லைட் ரைடிங்: தி போட்டோகிராபிக் இமேஜ் ரீ-லோடட்’ என்ற தலைப்பில், ஷெர்ஜில் சுந்தராம் ஆர்ட்ஸ் பவுண்டேஷன் ஆதரவில் நடைபெறுகிறது. வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த போட்டோகிராபி நிபுணர்கள், நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். அஷ்வினி அசோகன் (இந்தியா), திவாஸ் ராஜா கே.சி (நேபால்), எமேகே ஒக்கேரெக்கா (நைஜீரியா), கிறிஸ்டோபர் கான்சிங் (ஜெர்மனி), எம்.கே ராகவேந்திரா (இந்தியா), ரஷ்மி சாவ்னே (இந்தியா), பி.சாய்நாத் (இந்தியா), சபீனா கடியோக்கே (இந்தியா), சத்யஜித் மயோர் (இந்தியா), ஷேலே ஷேக் (பிரிட்டன்), டி.ஷனாநதன் (இலங்கை), வை.எஸ் அலோன் (இந்தியா), சுவாங் வுபின் (சிங்கப்பூர்) ஆகியோர் இந்நிகழ்ச்சியில் உரையாட உள்ளனர்

“ஒரு போட்டோகிராபராக, உலகின் பல்வேறு இடங்களில் நடைபெறும் போட்டோகிராபி கண்காட்சிகளுக்கு சென்றுள்ளேன். ஆனால், சென்னை போட்டோ பியனாலே, பொது மக்களையும் படைப்பாளிகளையும் ஒன்றிணைக்கின்றது” என்றார் வருண் குப்தா, நிறுவனர், சென்னை போட்டோ பியனாலே.

2வது எடிஷனில், மாணவ மாணவிகளுடன் இணைந்து பணியாற்ற போட்டோ பியனாலே திட்டமிட்டது. 2018 நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட சி.பி.பி கல்வி முகாம் மூலம், சென்னையிலுள்ள 265-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் (10-16 வயதுடையோருக்கு) போட்டோகிராபி பயிற்சி பட்டறையை நடத்தியது. இதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 25 மாணவ மாணவிகளுக்கு, பிப்ரவரி 1 முதல் 3-ம் தேதி வரை நடைபெற்ற அட்வான்ஸ்டு ரெசிடென்ஷியல் போட்டோகிராபி பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்களின் புகைப்படங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

சென்னை நகரத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறும் கண்காட்சிகளினால், போட்டோகிராபி குறித்த புரிதல் மக்களிடத்தில் அதிகரிக்கும். சென்னை பல்கலைக்கழகம் செனேட் ஹவுஸ், அரசு கலை கல்லூரி, அரசு அருங்காட்சியகம், மெட்ராஸ் லிட்ரரி சொஸைட்டி, எம்.ஆர்.டி.எஸ் இரயில்வே, சோழமண்டல ஆர்டிஸ்ட் வில்லேஜ், ஆர்ட் ஹவுஸ் காலெரி ஆகிய இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன

ப்ரிட்டீஷ் கவுன்சில், இன்கோ செண்டர், கனாடியன் கான்சுலேட், இன்ஸ்ட்யூட் பிரான்சு, ஜப்பான் பவுண்டேஷன், ப்ரோ ஹெல்வெடியா டில்லி மற்றும் யூ.எஸ் கான்சுலேட் ஜெனரல் ஆகிய அமைப்புகளின் உதவியால், சர்வதேச மாணவர்களும் இக்காட்சிப்படுத்துதலில் பங்கேற்றுள்ளனர்.

“சென்னை போன்ற பெரு நகரங்களில், போட்டோகிராபி சார்ந்த கலந்துரையாடல்களை தொடங்கி வைக்க கோதே இன்ஸ்ட்யூட் முழு முயற்சி எடுத்து வருகிறது. அதன் விளைவாக, சென்னை போட்டோ பியனாலே நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன” என்றார் ஹெல்மெட் ஷிப்பர்ட், சிபிபி நிறுவனர் மற்றும் இயக்குநர், கோதே இன்ஸ்ட்யூட் மேக்ஸ் முல்லர் பவன் சென்னை.

 

இந்தியாவில் இருந்து பங்கேற்கும் கலைஞர்கள்:

3டி ஸ்பேஸ் லாப் கலெக்டீவ், ஐஸ்வர்யா அரும்பாக்கம், அகிலா விஜயராகவன், அம்ஷூ ஷூக்கி, அர்ச்சனா ஹண்டே, அர்பன் முகர்ஜி, அருண் விஜய் மாதவன், அடுல் பல்லா, பாலாஜி மகேஷ்வர், காம்ப் இந்தியா, காப் சிவா, டி.ரவிந்தர் ரெட்டி, தயாநித்தா சிங், டிஸைர் மெஷீன் கலெக்டீவ், கவுரி கில், இந்து ஆண்டனி, ஜே.எச் தாக்கர், கார்த்திக் சுப்ரமணியன், கெளசிக் வாசுதேவன், மஞ்சுநாத் காமத், நளினி மாலினி, நந்தினி வள்ளி முத்தையா, காந்திநகர் நேஷனல் இன்ஸ்ட்யூட் ஆஃப் டிசைன், சென்னை நேஷனல் இன்ஸ்ட்யூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி, நவ்ஜோட் அல்தாஃப், அன்ஷிகா வர்மா தேர்ந்தெடுத்த ஆஃப்செட் பிடாரா, பி.சாய்நாத், ராம் ரஹமான், ரக்ஸ் மீடியா கலெக்டீவ், ஷேபா சச்சி, சோனியா ஜபார், சிருஷ்டி ஸ்கூல் ஆஃப் ஆர்ட் டிஸைன் அண்டு டெக்னாலஜி, சுஸந்தா மண்டல், தேஜல் ஷா, விஜய் ஜோதா, ஸ்ரீ எஸ்.எஸ் சஷுன் ஜெயின் மகளிர் கல்லூரி,  விவன் சுந்தரம்.

சர்வதேச கலைஞர்கள்: ஏஞ்சலா கிரவுர்ஹோல்ஸ் (கனடா), அன்னா ஃபாக்ஸ் (பிரிட்டன்), அர்மின் லிங்க் (ஜெர்மனி), காத்ரின் லுட்டநேகர் (சுவிட்சர்லாந்து), சாவோ ஹா பே (தென் கொரியா), ஜேஸன் சுல்மான் (பிரிட்டன்), கதர் அட்டியா (பிரான்சு & அல்ஜீரியா), லிஸ் ஃபெர்னாண்டோ (ஜெர்மனி), மனித் ஶ்ரீவனிச்பம் (தாய்லாந்து), முனேம் வாசிஃப் (வங்கதேசம்), நயிம் மொஹெய்மன் (வங்கதேசம்), புட்டு சயோகா (இந்தோனேஷியா), ரபி முரோ (லெபனான்), ரஷித் ரானா (பாகிஸ்தான்), ஷாதி காத்ரியன் (இரான்), சைமன் லீ & ஆல்கீஸ் கைஸிஸ் (அமெரிக்கா), டிரேஸி மொஃபெட் (ஆஸ்திரேலியா)

 

குறிப்பு:

சென்னை போட்டோ பியனாலே பற்றி:

சர்வதேச போட்டோகிராபி பியானாலேவான சி.பி.பி, போட்டோகிராபி சம்பந்தமான பல நிகழ்ச்சிகளை சென்னையின் பல்வேறு இடங்களில் நடத்தி வருகின்றன.  கண்காட்சிகள் மட்டுமின்றி, சர்வதேச கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள், திரைப்பட காட்சிகள், உரையாடல்கள் ஆகிய நிகழ்ச்சிகளும் இதில் இடம் பெற்றுள்ளன. கலாச்சார அறிவியலில் இது ஒரு பெரிய முயற்சியாகும். வெற்றிகரமான முதல் எடிஷனை தொடர்ந்து, இரண்டாவது எடிஷன் நடைபெற உள்ளது.

 

சென்னை போட்டோ பியனாலே பவுண்டேஷன் பற்றி:

போட்டோகிராபி கலையை வளர்க்க தொடங்கப்பட்ட என்.ஜி.ஓவான சி.பி.பி பவுண்டேஷன், கல்வி, சமூக கலாச்சார விவாதங்களையும் பொது மக்களுக்கு முன் வைக்கின்றன.

 

கோதே இன்ஸ்ட்யூட்/ மேக்ஸ் முல்லர் பவன் பற்றி:

சர்வதேச ஜெர்மனி கல்சுரல் இன்ஸ்ட்யூட்டின் ஒரு அங்கமாக செயலாற்றி வருகிறது சென்னையில் உள்ள கோதே இன்ஸ்ட்யூட். சர்வதேச அளவிலான கலாச்சார பரிமாற்றத்தை ஊக்குவிக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மக்களும் ஜெர்மன் மொழியை கற்க பணியாற்றி வருகிறது.

 

வருண் குப்தா, சிபிபி பற்றி:

கொல்கத்தாவில் பிறந்த திரு.வருண் குப்தா, ஃப்ரீலான்ஸ் போட்டோகிராபராக பணியாற்றியவர். 5 வருடம் அமெரிக்காவில் பணியாற்றி பின் சென்னை திரும்பினார். பயணங்களை பெரிதும் விரும்புவர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொது நலன் சார்ந்து இயங்கி கொண்டிருக்கும் அவர், பியனாலே டைரக்டரின் துணை நிறுவனரானார்.

 

ஹெல்மர்ட் ஷிப்பர்ட், சிபிபி நிறுவனர், கோதே இன்ஸ்ட்யூட்/ மேக்ஸ் முல்லர் பவன் இயக்குனர் பற்றி:

கடந்த 33 ஆண்டுகளாக ஜெர்மன் இன்ஸ்ட்யூட்டுடன் இயங்கி வரும் ஹெல்மர்ட், கெய்ரோ, சாண்டியாகோ டி சில், பாரிஸ், மெக்சிகோ சிட்டி ஆகிய நாடுகளில் பணியாற்றியுள்ளார். 2014-ம் ஆண்டு முதல் சென்னையில் பணியாற்ற தொடங்கிய அவர், பொது மக்களுக்கு பயன்படும் வகையிலான கலை நிகழ்ச்சிகளை செய்யத் தொடங்கினார். அதுவே போட்டோ பியனாலேவாக உருவானது

 

புஷ்பமாலா.என், ஆர்டிஸ்டிக் இயக்குனர், சி.பி.பி பற்றி:

சமகால இந்திய கலைகளில் பணியாற்றி வருபவர்களில் முதன்மையானவர்களில் ஒருவரான புஷ்பமாலா, மிக முக்கியமானவர். வீடியோ- பர்மாமன்ஸ் ஆர்டிஸ்ட், சிற்பி, எழுத்தாளர்,குரேடர் என பன்முகம் கொண்ட இவர், பெண்ணியம் சார்ந்த வேலைப்பாடுகளிலும் தீவிரமாய் ஈடுபட்டிருப்பவர். இயக்குனர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள் உடனான இவரது பணி தொடர்ந்து வருகிறது. சிற்ப கலைஞராக தொடங்கிய இவரது பயணம், 1990களில் ஸ்டேஜ்டு போட்டோகிராபி, போட்டோ பர்மாமன்ஸ் பக்கம் சென்றது. இந்தியா மட்டுமில்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் இவரின் நிகழ்ச்சிகள் அரங்கேறியுள்ளன.1996-ம் ஆண்டு, சோம்பேறிகட்டே என்ற ஃபிக்‌ஷனல் இன்ஸ்ட்யூட்டை பெங்களூருவில் தொடங்கினார். இவரது பணிகளை காண www.pushpamala.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

இணையதளம்: chennaiphotobiennale.com

இன்ஸ்டாகிராம்: @chennaiphotobiennale | @cpbphotocamps

ஃபேஸ்புக்: @ChennaiPhotoBiennale

ட்விட்டர்: @chnpb

 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *