சத்யபாமா நிகர்நிலை மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா!

சத்யபாமா நிகர்நிலை மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா!
சத்யபாமா நிகர்நிலை மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாநடைபெற்றது. நிறுவனத்தின் வேந்தர் முனைவர் மரியஜீனா ஜான்சன் மற்றும் தலைவர் முனைவர் மரிய ஜான்சன்  இருவரும் விழாவிற்கு தலைமையேற்று வளாகத்தேர்வில்வெற்றிபெற்ற மாணவர்களுக்கு  பணிநியமன ஆணைகளை வழங்கி கௌரவித்தார்கள். காஃக்னிசன்ட்  நிறுவனத்தின் துணைத்தலைவர்திரு. சீனிவாசன் அவர்கள் சிறப்பு  விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களிடத்தில் சிறப்புரை  ஆற்றினார். வேலைவாய்ப்புக்காகபதிவுசெய்த மாணவர்களில் 91.2  விழுக்காடு மாணவர்கள், பல்வேறு துறைகளில் உயர்ந்த ஊதியத்துடன்  வேலைபணியமர்த்தப்படுகின்றனர். இதுவரை மொத்தமாக 1138  பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ள.

2019-ம் ஆண்டு மாணவர்களுக்கு இதுவரை 267-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வருகைபுரிந்து தகவல் தொழில்நுட்பம், மென்பெருள்உருவாக்கம், தளவாடங்கள், ஆலோசனை வழங்கல், நிதி  மேலாண்மை, செயலாக்கம், விற்பனை மற்றும் விளம்பரப்படுத்துதல் போன்ற பல்வேறு பிரிவுகளில் பணி நியமனங்களை வழங்கியுள்ளன.

இந்த  267 நிறுவனங்களில் 63 நிறுவனங்கள் மாணவர்களின் உலகத்தரம் வாய்ந்த கனவு நிறுவனங்களாக உள்ளன. புதிய உச்சமாக186 மாணவர்கள் 4.5 இலட்சத்திற்கும் கூடுதலான ஆண்டு ஊதியத்துடன் நியமன ஆணைகளை பெற்றிருக்கிறார்கள். உயர் ஊதியவேலைவாய்ப்புகள்  மாணவர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றன.

 

வேலைவாய்ப்பு வளாகத்தேர்வுக்கான முக்கிய அம்சங்கள்: 

  1. மாணவர்களுக்குகிடைக்கப்பெற்ற உச்ச ஊதியம்ஆண்டுக்கு 18 இலட்சம்
  2. சராசரிஆண்டு ஊதியம் 3.5 இலட்சம்
  3. புதியநிறுவனங்களில் பல்வேறுபட்ட விரும்பத்தக்க பணிவாய்ப்புகள் வழங்கப்பட்டன.
  4. HCLநிறுவனம் 100 மாணவர்களுக்கு 4.75 இலட்சம் ஆண்டு ஊதியத்துடன் பணி வழங்கியிருக்கிறதுஇது இந்தியாவிலேயேஒற்றைக் கல்லூரிக்கு வழங்கபட்ட உச்ச எண்ணிக்கை ஆகும்.

வளாகத்தேர்வில் பங்குபெற்ற சில நிறுவனங்கள்:

Cognizant, Wipro, Capgemini, MuSigma, TCS, Nielsen, L&T Infotech, Amazon, Hexaware, Human Resocia, Hitachi, Byjus, Titan, IBM, HCL, Siemens, Oracle, Zifo Tech, Sopra Steria, Verizon, Tata Communications, Jaro, Renault Nissan, Kotak, HSBC Technologies, Comitas, Deloitte, DXC, Bosch, NTT Data, Mphasis, ADF Data Science, Linarc, ADP, Bonfigioli, Object Frontier, Yamaha, Renault Nissan  மற்றும் பல.

எதிர்காலங்களில் வளாகத்தேர்வுகளில் நிறைய நிறுவனங்கள்  பங்குபெற்று இன்னும் நிறைய மாணவர்களை பணியமர்த்த இருக்கிறாரகள்.

பெருநிறுவனங்கள் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில் சத்யபாமா மாணவர்கள் தயாராக இருந்தனர்.

நேர்முகத்தேர்வை எதிர்கொள்ளும் வகையில்  மாணவர்கள் Amazon, Cognizant, hexaware போன்ற நிறுவனங்கள் மூலமாகதிட்டப்பணி/பயிலர் பயிற்சி கிடைக்கபெற்றிருந்தனர்.

இறுதியாண்டு மாணவர்கள் உருவாக்கியிருக்கும் இப்பெரும் சாதனை  மூன்றாமாண்டு மாணவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வரும் நாட்களில் சத்யபாமா மாணவர்கள்  உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்பில் சிறந்து  விளங்குவார்கள்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *